×

மாணவர்களுக்கு பள்ளி நேரத்திற்கு பின் ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.!

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறன் குறைவாக  இருப்பதால் பள்ளி நேரத்திற்கு பின் ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால், தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்.1-ஆம் தேதி முதல் 9-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நவ.1 ஆம் தேதி முதல் 1-8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பலிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில், வேளச்சேரியில் லயன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறன் குறைவாக  இருப்பதால், பள்ளி நேரத்திற்கு பின், ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,Anbil Mahesh , Students will be given English speaking skills training after school hours: Interview with Minister Anbil Mahesh!
× RELATED தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு...