×

ஐஐடி வளாகத்தில் ஓராண்டில் 56 நாய்கள் இறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறப்பு தொடர்பான புகாரின் அடிப்படையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் மணிஷ், இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:  45 நாய்கள் இறந்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. ஐஐடி நிறுவனம் 617 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. 10,600 சதுர அடி பரப்பில் செட்டுகள் அமைத்து நாய்களை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் வெறித்தனம் இல்லாத 14 நாய்கள் வெளியில் விடப்பட்டுள்ளது. ேமலும் ஓராண்டில் 56 நாய்கள் இறந்துள்ளது. வெளியில் இருந்து செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு விருப்பம் தெரிப்பவர்களுக்கு 29 நாய்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பட்டியலையும் கேட்டுள்ளோம். 2 நாய்கள் இங்கிருந்து தப்பித்து சென்றுள்ளது. தற்போது 87 நாய்கள் பராமரிப்பில் உள்ளது.  

மேலும் 56 நாய்கள் இறப்பிற்கான காரணம் கேட்ட ேபாது வயது முதிர்வின் காரணமாக 8 முதல் 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இறந்துள்ளதாகவும், உடல்நிலை பாதிப்பு காரணமாக என ஓராண்டில் 56 நாய்கள் இறந்துள்ளது. கடந்த ஓராண்டில் 16 அமைப்புகளை சேர்ந்தவர்கள் நாய்கள் பராமரிப்பு சம்பந்தமான பணிகளை பார்வையிட்டு சென்றுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டில் 92 மான்கள் இறந்துள்ளது. அதில் 55 மான்கள் நாய்கள் கடித்து இறந்துள்ளதாக பதிவு செய்துள்ளனர். அதன்படி 2019ம் ஆண்டில் 38 மான்கள், 2020ம் ஆண்டில் 28 மான்கள் மற்றும் இந்த ஆண்டு குறைந்து 3 என்கிற  அளவில் நாய்கள் கடித்து மான்கள் இறந்துள்ளது. எனவே அதையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து இந்த பணிகளை செய்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.  


Tags : IIT ,Minister ,Ma. Subramanian , At the IIT campus, in one year, 56 dogs, died
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...