×

டி.20 உலக கோப்பை இன்று தொடக்கம்: தகுதி சுற்றில் ஓமன்-பப்புவா நியூகினியா வங்கதேசம்-ஸ்காட்லாந்து மோதல்.!

துபாய்: 16 அணிகள் பங்கேற்கும் 7வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் ஓமனில் 6 லீக் போட்டிகளும், மற்ற அனைத்து போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகிறது. தகுதி சுற்றில் 8 அணிகள் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, ‘பி’ பிரிவில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் இருபிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் சூப்பர் 12 சுற்றுக்குதகுதி பெறும்.

சூப்பர் 12 சுற்றில் குரூப்-1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் 2 தகுதி சுற்று அணிகள், குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் 2 தகுதி அணிகள் இடம்பெறும். சூப்பர் 12 சுற்றில், இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு நுழையும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வரும் 24ம்தேதி துபாயில் எதிர்கொள்கிறது. அதற்கு முன் 2 பயிற்சி ஆட்டங்களில் இந்தியா ஆடுகிறது. நாளை இங்கிலாந்துடனும், 20ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. முதல் நாளான இன்று தகுதி சுற்றில் 2 போட்டிகள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு ஓமன்-பப்புவா நியூ கினியா, இரவு 7.30 மணிக்கு வங்கதேசம்-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.



Tags : T20 World Cup ,Oman ,Papua New Guinea ,Bangladesh ,Scotland , T20 World Cup starts today: Oman-Papua New Guinea-Bangladesh-Scotland clash in qualifying round.!
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...