வன விலங்குகளின் கூடாரமாக மாறிய எச்பிஎப் தொழிற்சாலை குடியிருப்புகள்

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள எச்பிஎப் தொழிற்சாலை குடியிருப்புகள் பயன்படுத்தப்படாத நிலையில், வன விலங்குகளின் கூடாரமாக மாறியுள்ளது. ஊட்டி அருகேயுள்ள எச்பிஎப் தொழிற்சாலையில் புகைப்பட சுருள், எக்ஸ்ரே பிலிம் போன்றவைகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த தொழிற்சாலையில் துவக்கத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊழியர்களண் மற்றும் அதிகாரிகள் என பலரும் பணியாற்றி வந்தனர். இந்த தொழிற்சாலையை சுற்றிலும் குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதில், ஏராளமான ஊழியர்கள் தங்கியிருந்தனர். கடந்த 20 ஆண்டுக்கு முன் இந்த தொழிற்சாலை படிப்படியாக நஷ்டத்திற்கு சென்றது. கடந்த இரு ஆண்டுக்கு முன் இந்த தொழிற்சாலை நலிவடைந்த தொழிற்சாலையாக அறிவித்த மத்திய அரசு இதனை மூடியது.

இதனால், இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாய விருப்ப ஓய்வில் அனுப்பப்பட்டனர். இதனால், குடியிருப்புகளையும் ஊழியர்கள் காலி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இந்த குடியிருப்புகள் காமராஜ்சாகர் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ளது. தற்போது குடியிருப்புகள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ள நிலையில இப்பகுதியில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிரித்துள்ளது. குறிப்பாக, சிறுத்தை, காட்டு மாடுகள், காட்டுப்பன்றிகள் மற்றும் கரடிகளின் கூடாரமாக இந்த குடியிருப்புகள் மாறிவிட்டன. மேலும், செந்நாய் கூட்டமும் அதிகரித்துள்ளது. இதனால், இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு தற்போது பகல் நேரங்களிலேயே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த குடியிருப்புக்களை சீரமைத்து பொதுமக்களுக்கு வாடகைக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.

Related Stories: