பிறந்த சில மணிநேரத்தில் சாலையில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு

காரைக்குடி: காரைக்குடி அருகே கல்லல் கூத்தலூரில் இருந்து நாகவயல் செல்லும் சாலையில் ஓடு பாலம் உள்ளது. இப்பாலத்தின் அருகே அழுக்கு துணியில் சுற்றிய நிலையில் மூட்டை போல் கிடந்துள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் சந்தேகமடைந்து துணியை பிரித்து பார்த்த போது, பிறந்த சில மணிநேரமேயான பெண் குழந்தை இருந்துள்ளது. உடனடியாக கல்லல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அவர்கள் குழந்தையை மீட்டு எஸ்.ஆர்.பட்டணம் ஆரம்பசுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை செய்த பின், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர். தவறான வழியில் பிறந்த குழந்தையா அல்லது பெண் குழந்தை என்பதால் சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதி மக்கள் உடனடியாக பார்த்ததால் நாய்களிடம் இருந்து குழந்தை காப்பற்றப்படுள்ளது.

Related Stories:

More
>