×

தேனி மினி பஸ்களில் மினிமம் கட்டணம் ரூ.10 வசூல்: கலெக்டர் நடவடிக்கை தேவை

தேனி: தேனி மினி பஸ்களில் மினிமம் கட்டணமாக ரூ.10 வசூலிப்பதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்கள், நகர்புற விரிவாக்க பகுதிகளில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்காக கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மினி பஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. இம்மினி பஸ் திட்டத்தால் பல நகர்புற விரிவாக்க பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், கிராம புற மக்களும் பயன்பெற்று வந்தனர்.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின்போது, இந்த மினி பஸ் திட்டம் சீரழிக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து இல்லாத பகுதிகளை பஸ் போக்குவரத்துள்ள சாலைகளுடன் இணைக்கும் வகையிலான மினி பஸ் திட்டத்தை சீரழிக்கும் வகையில் மாற்றப்பட்டது. தேனி நகரினை மையமாக வைத்து இயக்கப்படும் மினி பஸ்கள் தங்களுக்கான அனுமதி பெற்ற வழித்தடங்களில் பஸ்களை இயக்குவதில்லை. மேலும், அரசு மினி பஸ்கள் வசூலிக்க நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்காமல் பல மடங்கு உயர்த்தி பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கின்றனர்.

அரசு டவுன் பஸ்களில் முதல் ஸ்டேஜூக்கு மிகக் குறைந்த கட்டணமாக ரு.5 மட்டும் வசூலிக்கப்படுகிறது. எல்எஸ்எஸ் எனப்படும் டவுன் பஸ்களில் முதல் ஸ்டஜேூக்கு மிகக் குறைந்த கட்டணமாக ரூ. 6 மட்டும் பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது . ஆனால் தேனியில் இயக்கப்படும் மினி பஸ்களில் முதல் ஸ்டஜேூக்கே பயணிகளிடம் இருந்து ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அரசு டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், மினி பஸ்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மினிபஸ்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Honey , Minimum fare of Rs. 10 on Theni minibuses: Collector action required
× RELATED ஃப்ரூட் சாலட் வித் ஹனி