அனைத்து மாநில முதல்வருக்கு அண்ணாமலை கடிதம் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உதவிட வேண்டும்

சென்னை: தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உதவிட வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வருக்கு பாஜ தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அனைத்து மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பாரம்பரியமான மிக பிரதான தொழிலில் பட்டாசு தயாரிப்பு தொழில் மிக முக்கியமானதாகும். தமிழகத்தில் மட்டும் இத்தொழிலை நம்பி 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வணிகர்கள் அது சார்ந்த தொழிலில் இருந்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை சிறப்பாக இருக்க வேண்டும் என்று அதை சார்ந்த லட்சக்கணக்கான மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்திட முடிந்தவரை இடையூறுகள் இல்லாத வண்ணம் உதவிட வேண்டும்.  இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>