ஊட்டி, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் கூட்டம்

சென்னை: தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானல், ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு  சுற்றுலாப்பயணிகள் வருகை கடந்த 3 நாட்களாக அதிகமாக இருந்தது. நகர் பகுதி நுழைவிடமான வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் அனைத்து சுற்றுலா இடங்களிலும் வாகனங்களால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக நேற்று போக்குவரத்து ஸ்தம்பித்தது.

மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக், ஏரி பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் அலைமோதினர். விடுதிகளில் அறைகள் இல்லாமல் பலர் திரும்பினர். வாகனங்கள் அதிக அளவில் குவிந்ததால் கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

ஒன்றரை ஆண்டுக்கு பின் ஊட்டிக்கு கடந்த 3 நாட்களில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால், ஊட்டி நகரின் பல்வேறு சாலைகளிலும் நேற்று வாகன நெரிசல் காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர்.

Related Stories:

More
>