மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்த பெண் போலீஸால் பரபரப்பு

கோவை: கோவை காரமடை கணுவாய் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதா (40). இவர் காரமடை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு பணியிடம் மாற்றப்பட்டார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளார். அங்கே திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் விஷம் குடித்திருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுதாவிற்கும், அவரது கணவருக்கும்  அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. எனவே குடும்ப பிரச்னையால் அவர் விஷம் குடித்தாரா? அல்லது பணியிட மாறுதல் காரணமாக விஷம் குடித்தாரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: