திருச்சி விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து கடத்தி வந்த ரூ.2.62 கோடி தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளை வான்நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் மற்றும் இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த அமுதா(27), அரியலூர் மேலத்தெருவை சேர்ந்த சித்ரா(21), சிவகங்கை மாவட்டம் முடிகண்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த முருகன்(36), திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்த அப்துல்அஜீஸ்(27), தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த முகமது அப்ரோஸ்(32) ஆகியோர் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து ரூ.2.62 கோடி மதிப்பிலான 6.65 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

More
>