ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த சசிகலா ஆதரவாளர்களிடம் செல்போன், பணம் திருட்டு

சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று காலை தனது ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தொண்டர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், இதை பயன்படுத்தி சசிகலா ஆதராவளர்களிடம் 3 செல்போன்கள் மற்றும் 2,300 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரிக்கின்றனர். சசிகலா ஆதரவாளர்கள் 20 பேரிடம் ரூ.93 ஆயிரம் மற்றும் 5 செல்போன்கள் திருடுபோனதாகவும், இதில் பலர் இதுவரை போலீசில் புகாரளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Related Stories:

More
>