கேரள அரசு சினிமா விருதுகள் அறிவிப்பு சிறந்த நடிகர் ஜெயசூர்யா, நடிகை அன்னா பென்

திருவனந்தபுரம், அக்.17: கேரள அரசின் 51வது மாநில சினிமா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் கேரள கலாச்சார துறை அமைச்சர் சஜி செரியான் விருதுகளை அறிவித்தார். அதன் விவரம்: சிறந்த நடிகர்-ஜெயசூர்யா (படம்: வெள்ளம்), சிறந்த நடிகை-அன்னா பென் (படம்: கப்பேலா), சிறந்த படம்-தி கிரேட் இந்தியன் கிச்சன், சிறந்த இயக்குனர்-சித்தார்த் சிவா (படம்: என்னிவர்), சிறந்த புதுமுக இயக்குனர்-முஸ்தபா (படம்: கப்பேலா), சிறந்த குணச்சித்திர நடிகர்-சுதீஷ் (படம்: என்னிவர், பூமியிலே மனோகர ஸ்வகாரியம்), சிறந்த குணச்சித்திர நடிகை-ஸ்ரீரேகா (படம்: வெயில்), சிறந்த ஜனரஞ்சக படம்-அய்யப்பனும் கோஷியும், சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஆண்)-நிரஞ்சன் (படம்: காசிமின்டெ கடல்), சிறந்த குழந்தை நட்சத்திரம் (பெண்)-அரவ்யா ஷர்மா (படம்: பியாலி), சிறந்த கேமராமேன்-சந்துரு செல்வராஜ் (படம்: கயற்றம்), சிறந்த திரைக்கதை ஆசிரியர்-ஜியோ பேபி (படம்: தி கிரேட் இந்தியன் கிச்சன்), சிறந்த பாடலாசிரியர்-அன்வர் அலி, சிறந்த இசை அமைப்பாளர்-எம்.ஜெயச்சந்திரன், சிறந்த பின்னணி பாடகர்-ஷஹபாஸ் அமன், சிறந்த பின்னணி பாடகி-நித்யா மாமன். பேட்டியின்போது விருது கமிட்டி தலைவரும், நடிகையுமான சுகாசினி, மலையாள சினிமா அகாடமி தலைவர் கமல் உடனிருந்தனர்.

Related Stories:

More