பிஎன்பி பாரிபா ஓபன் பைனலில் அசரென்கா-படோசா மோதல்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவுடன் ஸ்பெயினின் பவுலோ படோசா மோதுகிறார். அரையிறுதியில் லாத்வியாவின் ஜெலனா ஆஸ்டபென்கோவுடன் (24வயது, 29வது ரேங்க்) மோதிய அசரென்கா (32வயது, 32வது ரேங்க்) 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 20 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு அரையிறுதியில் துனிசியாவின்  ஆன்ஸ் ஜெபருடன் (27வயது, 14வது ரேங்க்) மோதிய படோசா (23வயது, 27வது ரேங்க்) 6-3, 6-3 என நேர் செட்களில் வென்றார்.

இப்போட்டி 1 மணி, 21 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இன்று நடக்கும் பைனலில் படோசா - அசரென்கா மோதுகின்றனர். பெரிய போட்டி ஒன்றில், படோசா பைனலுக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.  முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான அசரென்கா, பாரிபா ஓபனில்  ஏற்கனவே  2 முறை பட்டம் வென்றுள்ளார். முன்னணி வீரர்கள் அதிர்ச்சி: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீரர்கள் ஸ்டெபனோ சிட்சிபாஸ் (கிரீஸ்), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினர்.

காலிறுதியில் அமெரிக்காவின் டெய்லர்  ஃபிரிட்சுடன் (39வது ரேங்க்)  மோதிய ஸ்வரெவ் 6-4, 3-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் போராடி தோற்றார். மற்றொரு காலிறுதியில்  சிட்சிபாஸ் (3வது ரேங்க்) 4-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில்  ஜார்ஜியாவின்  நிகோலஸ் பாசிலாஷ்விலியிடம் (36வது  ரேங்க்) தோற்று வெளியேறினார். கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா), கேமரான் நோர்ரி (இங்கிலாந்து) ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories: