சாம்பியன் சூப்பர் கிங்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஐபிஎல் தொடரின் 14வது சீசன் பைனலில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்-ல் இருந்து அற்புதமான நிகழ்ச்சி. மன்னர்கள் மீண்டும் கர்ஜித்தனர். நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதற்காக உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு சிஎஸ்கே வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள். எம்.எஸ்.தோனியின் இந்த வெற்றியை கொண்டாட சென்னை காத்திருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

More
>