தமிழக அரசுபணி தேர்வை பிற மாநிலத்தவரும் எழுதலாம் என்ற சட்டதிருத்தத்தை ரத்து செய்க: த.வா.க. தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: அரசு பணி தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சட்டதிருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.  தமிழக அரசு பணி தேர்வை பிற மாநிலத்தவரும் எழுதலாம் என்ற சட்டதிருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்  கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தமிழக தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் வேலைவாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க சட்டம் தேவை என்றும் வேல்முருகன் எம்.எல்.ஏ. குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: