சிவகங்கை அருகே சாலையோர மரத்தில் லாரி மோதி விபத்து: 2 பேர் பலி; 4 பேர் படுகாயம்

சிவகங்கை: சிவகங்கை அருகே வாகன விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். மணிகண்டன் என்பவர் தனது சரக்கு வாகனத்தில் 5 பேருடன் நாகப்பட்டினத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார். அழகாபுரி என்ற இடத்தில் ஓட்டுனர் மணிகண்டன் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதினார். இந்த விபத்தில் ஓட்டுனர் மணிகண்டன், சின்ன அழகுமலை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories: