ராமலிங்க சௌடேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

திருமுருகன்பூண்டி:  திருப்பூர், திருமுருகன்பூண்டி பாரதி நகரில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவராத்திரி கொலு பூஜை கடந்த 9 நாட்களாக நடந்தது. தினமும் மாலை 7 மணி முதல் 7.30 மணி வரை  சௌடேஸ்வரி அம்மனுக்கு குங்குமார்ச்சனை, பாலா திரிபுரசுந்தரி, வராக்கியம்மன், கஜலட்சுமி, சந்தானலட்சுமி, ஸ்ரீ லட்சுமி குபேரன் ஆகிய பூஜைகள் உள்பட சிறப்பு அலங்கார பூஜை மற்றும் தீபாராதனையம், கொழு பூஜையும் நடந்தது. இதைத்தொடர்ந்து 10வது நாளான நேற்று காலை 10 மணிக்கு விஜயதசமி சிறப்பு பூஜை நடந்தது. அப்போது ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் சிங்கத்தின் மீது உட்கார்ந்து நிலையில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் தீபாராதனையும் நடந்தது.

இந்த பூஜைகளை கோயில் குருக்கள் ஜெகதீஸ்வர சாஸ்திரிகள் செய்தார். கொலு பூஜையையொட்டி அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வந்து பூஜையில் கலந்து கொண்டனர். தொடர்ந்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவினை  கோயில் கமிட்டி தலைவர் சண்முகம், செயலாளர் காளிமுத்து, பொருளாளர் பாரதி மற்றும் கமிட்டி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Related Stories: