×

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் சின்னச்சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

வருசநாடு:  வருசநாடு அருகே, சின்னச்சுருளி அருயில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள சின்னச்சுருளி அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த சில தினங்களாக வருசநாடு வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது, இதனால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கக் கூடாது என மேகமலை வனத்துறை எச்சரித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சின்னச்சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி, மதுரை, சின்னமனூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் சின்னச்சுருளி அருவிக்கு நேற்று வந்திருந்தனர். ஆனால், வனத்துறை தடையால் திரும்பிச் சென்றனர். இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ‘சின்னச்சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், குளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Chinnachuruli Falls , Cinnamon Falls in the catchment area by rain Increase in water level: Tourists are not allowed to bathe
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால்...