ஆண்டிபட்டி அருகே சிதிலமடைந்த அங்கன்வாடி மையம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, சிதிலமடைந்து வரும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே, ராஜகோபாலன்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கன்வாடி மையக் கட்டிடம் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனால், கட்டிடங்கள் சேதமடைந்து விரிசல் அடைந்து வருகின்றன.

மழை காலங்களில் கட்டிடத்தின் உள்புறம் மழைநீர் கசிகிறது. இதனால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். எனவே, அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More