×

கெங்கவல்லியில் அரியவகை குரங்கு சிக்கியது

கெங்கவல்லி: கெங்கவல்லி பஸ் ஸ்டாப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை வளாகத்தில், கடந்த 2ம் தேதி அரிய வகை குரங்கு ஒன்று சுற்றித்திரிந்தது. முகம் முழுவதும் கறுமையான நிறத்தில் காணப்பட்ட அந்த குரங்கு, லங்கூர் வகையைச் சேர்ந்தது என தகவல் பரவியது. உருவத்தில் சற்று பெரியதாக காணப்பட்ட அந்த குரங்கு, மருத்துவமனை பக்கமாக செல்வோர் மீது பாய்ந்து விடுவதுபோல் போக்கு காட்டி வந்ததால் மக்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், சேலம் மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின்பேரில், தம்மம்பட்டி வனச்சரக அலுவலர் சந்திரசேகர் வழிகாட்டுதலின்படி, கெங்கவல்லி வனவர் சிலம்பரசன் தலைமையில் குரங்கை பாதுகாப்பாக பிடிப்பதற்காக 2 கூண்டுகள் வைக்கப்பட்டன.

ஆனால், 2 வாரங்களாக அந்த குரங்கு கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. அவ்வப்போது ஆங்காங்கே தலைகாட்டி வந்த குரங்கை, வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஆணையம்பட்டியில் வைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் அந்த குரங்கு வசமாக சிக்கிக் கொண்டது. அதனை வன ஊழியர்கள் பெரியசாமி, முனீஸ்வரன், சிவக்குமார், ரபிதாபேகம், விஜயகாந்த், சசிகலா, கீதா ஆகியோர் மீட்டு மஞ்சவாடி கணவாய் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். அவர்களை வனச்சரகர் சந்திரசேகர் பாராட்டினார்.

Tags : Kengavalli , Rare monkey trapped in Kengavalli
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு