கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பள்ளிப்பட்டு:  ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பெரியராமாபுரம் ஊராட்சி செட்டிவாரிப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ கங்கையம்மன் கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு நேற்று மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.   விழாவையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு நித்திய ஹோமகுண்ட பூஜைகள்  நடைபெற்றன.  நேற்று காலை மஹா பூர்ணாஹுதி பூஜைகள் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீரால் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதில், பெரும் திரளாக கிராமமக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். சிறுவர்கள் அஸ்டலட்சுமி வேடமிட்டு பங்கேற்றது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சி.என்.சண்முகம், மணி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Stories:

More
>