×

செங்கல் சேம்பர் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள் சட்டங்கள் குறித்த கையேடு: கலெக்டர் வெளியிட்டார்

திருவள்ளூர்: செங்கல் சேம்பர் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அரசு செயல்படுத்தும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் குழந்தைகள், பெண்கள், தொழிலாளர்கள் நலன் குறித்த சட்டங்கள் அடங்கிய விழிப்புணர்வு கையேட்டினை திருவள்ளூரில் உள்ள ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவனம், மாவட்ட நிர்வாகம், அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் இணைந்து சிறிய புத்தக வடிவில் தயாரத்துள்ளது. இந்த கையேட்டினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்  வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவன நிர்வாக செயலாளர் ஸ்டீபன், கள ஒருங்கிணைப்பாளர் மணி ஆகியோர் உடனிருந்தனர். இந்த கையேடானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் , மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களுக்கும், செங்கல் சேம்பர் தொழிலாளர்களுக்கும், செங்கல் சேம்பர் உரிமையாளர்களுக்கும் மற்றும் சமூக தன்னார்வலர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இந்த விழிப்புணர்வு கையேடானது தொழிலாளர்களுக்கும், உரிமையாளர்களுக்கும், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கும் மற்றும் தன்னார்வலர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த புத்தகத்தை பயன்படுத்தி தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை எளிய முறையில் ஏற்படுத்தி அரசாங்கத்தின் சமூக பாதுகாப்பு நல திட்டங்களையும், சேவைகளையும், சட்ட உரிமைகளையும் பெற்று வளமான வாழ்வு வாழ்வதற்கு உதவியாக இருக்கும் என்று ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவன நிர்வாக செயலாளர் ஸ்டீபன் தெரிவித்தார்.

Tags : Brick, Chamber, Labor, Social Security Scheme, Laws
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை