அப்துல் கலாம் 90ம் பிறந்தநாள் துணை ஜனாதிபதி பிரதமர் புகழஞ்சலி

புதுடெல்லி: முன்னாள்  ஜனாதிபதி அப்துல் கலாமின் 90வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி  பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஏவுகணை நாயகன் என அறியப்படும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின்  பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல் கலாம். அவர் எப்போதும் நாட்டு மக்களுக்கு தூண்டுதலாக இருக்கிறார்,’ என்று கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `மக்களின் ஜனாதிபதி’ என பிரபலமாக அறியப்பட்ட புகழ் பெற்ற விஞ்ஞானி அப்துல் கலாம், நாட்டின் பாதுகாப்பு, விண்வெளி துறையை வலுப்படுத்த அளித்த விலை மதிப்பற்ற பங்களிப்புக்காக நினைவு கூரப்படுவார்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>