நிலக்கரி பற்றாகுறை இல்லை அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டி: கடந்த ஆட்சியில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் சுமார் 71 ஆயிரம் டன் நிலக்கரி பதிவேட்டிற்கும் அங்குள்ள இருப்புக்கும் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை வந்த பிறகு, யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலக்கரி தேவை நாள் ஒன்றுக்கு 56 ஆயிரம் டன். நேற்று 51 ஆயிரம் டன் நிலக்கரி தமிழகத்திற்கு வந்துள்ளது. ஒவ்வொரு நாள் தேவைக்கேற்ப நிலக்கரி தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது என்றார்.

Related Stories:

More
>