கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டியில் 5 நாள் ஓய்வு

ஊட்டி: தமிழக கவர்னர் ஆ.என்.ரவி 5 நாட்கள் ஓய்விற்காக ஊட்டி வந்துள்ளார். நேற்று சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் மூலம் வந்த அவர், அங்கிருந்து காரில்  ஊட்டி வந்தடைந்தார். நேற்று மாலை 6 மணிக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு கவர்னர் குடும்பத்துடன் வந்தார். அவரை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். 19ம் தேதி வரை 5 நாட்கள் ஊட்டியில் தங்கி பல்வேறு சுற்றுலா தலங்களை கவர்னர் கண்டு ரசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

More