மதுரை, காரைக்குடி செல்லும் அதிவேக சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து

சென்னை:  தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மதுரை- சென்னை எழும்பூர் இடையே (02636) அதிவேக சிறப்பு ரயில் மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு இயக்கப்படும் ரயில் 20 மற்றும் 27ம் தேதி விழுப்புரம்- மதுரை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதைப்போன்று சென்னை எழும்பூர்- காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (02605) எழும்பூரில் இருந்து 3.45 மணிக்கு புறப்படும் ரயில் 20 மற்றும் 27ம் தேதி சென்னை எழும்பூர்- விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டு விழுப்புரத்தில் இருந்து 6.10 மணிக்கு புறப்படும். மேலும் புதுச்சேரி- டெல்லி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (04071) புதுச்சேரி சந்திப்பில் இருந்து 9.50 மணிக்கு புறப்படும் ரயில் 20 மற்றும் 27ம் தேதிகளில் மாற்றுப்பாதையான விழுப்புரம், காட்பாடி, பெரம்பூர், கூடூர் வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும். கூடுதலாக இந்த ரயில் பெரம்பூரில் ர் ரயில் நிலையத்தில் நின்று புறப்படும்.

Related Stories:

More