சென்னையில் நள்ளிரவு தனியாக நடந்து செல்லும் இளம் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நட்சத்திர ஓட்டல் ஊழியர் கைது: பதறவைக்கும் சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் நடவடிக்கை

சென்னை: சென்னையில் நள்ளிரவில் பணி முடிந்து தனியாக நடந்து செல்லும் இளம் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த நட்சத்திர ஓட்டல் ஊழியர் ஒருவரை, பதறவைக்கும் சிசிடிவி பதிவுகள் மூலம் போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் 2வது மெயின் ரோட்டில் உள்ள ஆவின் பூத் அருகில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் தனது 2 மகள்களுடன் கடந்த 10ம் தேதி  நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது முன்னாள் ராணுவ வீரரின் 22 வயதுடைய 2வது மகள்  நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வாலிபர் ஒருவர், தனியாக சென்ற இளம் பெண்ணை பார்த்ததும் மெதுவாக தனது பைக்கை ஓட்டியபடி பாலியல் ரீதியாக  தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதை பார்த்த மர்ம வாலிபர் மின்னல் வேகத்தில் பைக்கில் சென்றுவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் தனது தந்தையுடன் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி உதவி கமிஷனர் அக்ஸ்டின் பால்சுதாகர் உத்தரவுப்படி குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று ஆய்வு ெசய்த போது அதிர்ச்சி தரும் பல காட்சிகள் வெளியாகி பதிவாகி இருந்தது.

அதேபோல், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இதுபோல் வாலிபர் ஒருவர் தனியாக நடந்து சென்றபோது பாலியல் பாதிக்கப்பட்டதாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அண்ணாநகரில் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரின் புகைப்படத்தை கீழ்ப்பாக்கத்தில் பாதித்த பெண்ணிடம் காட்டினார். அதை அவர் உறுதி ெசய்தார். உடனே இரண்டு இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளில் உள்ள பைக் பதிவு எண்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது தான் அந்த நபர் சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாத நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார்(19) என்பது தெரிந்தது.

இவர், சென்னையில் தனியாக அதிகாலை மற்றும் நள்ளிரவில் செல்லும் பெண்களிடம் கத்தி முனையில் பாலியல் தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது. வசதியான குடும்பத்தை சேர்ந்த தினேஷ்குமார் தலைநகர் டெல்லியில் பிரபல கல்லூரி ஒன்றில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வருகிறார். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. இதனால் தினேஷ்குமார் தனது வீட்டில் இருந்தபடியோ ஆன்லைன் வகுப்புகள் படித்து வருகிறார். அதேநேரம், ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வருவதால், தினேஷ்குமார் எழும்பூரில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பயிற்சி பெற்று வருகிறார். டெல்லியில் படிக்கும் போது தினேஷ்குமாருக்கு இளம் பெண்களுக்கு அடிமையாகி அதிகளவில் பணம் செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் தினேஷ்குமாரை கைது செய்தனர். அதேநேரம் தினேஷ்குமார் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் ஆன்லைன் மூலம் தொடர் புகார்கள் அளித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட தினேஷ்குமாரிடம் சிசிடிவி காட்சிகளை வைத்து நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பயிற்சி ஊழியராக வேலை செய்து வரும் தினேஷ்குமார், அதிகாலை 4 மணிக்கு ஓட்டலுக்கு பணிக்கு செல்லும் போதும், அதேபோல் நள்ளிரவு 1 மணிக்கு மேல் பணி முடிந்து செல்லும் போதும் வில்லிவாக்கத்தில் இருந்து அண்ணாநகர் வழியாக ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலைகள் மற்றும் குறுகிய சாலைகளை தான் பயன்படுத்தி எழும்பூருக்கு பணிக்கு செல்வார்.

அதன்படி அதிகாலை பணிக்கு செல்லும் இளம் பெணகள் மற்றும் நள்ளிரவில் பணிமுடிந்து பேருந்து இல்லாமல் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து உதவி செய்வது போல் நடித்து தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனது பைக் பழுதடைந்துவிட்டதாக கூறி கத்தி முனையில் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். அப்படி ஆசைக்கு மறுக்கும் பெண்களை கட்டியனைத்து உடலில் பல இடங்களில் தனது கைகளால் பாலியல் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தான் அதிகளவில் இதுபோல் இளம் பெண்களிடம் தவறாக நடந்து வந்துள்ளார். அவன் அளித்த வாக்குமூலத்தின் படி 80க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் சிசிடிவி காட்சிகளும் ஆதாரமாக உள்ளது. தினேஷ்குமாரை ‘சைகோ’ என்று கூறமுடியாது ஏன் என்றால் அவனுக்கு 19 வயது தான் ஆகிறது. டெல்லியில் படிக்கும் போது இதுபோன்று சாலையில் தனியாக நடந்து செல்லும் இளம் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை கொரோனா ஊரடங்குற்கு பிறகு கல்லூரி மூடியதும் சென்னைக்கு வந்து தொடர் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் டெல்லி காவல் நிலையங்களில் இதுபோன்ற வழக்குகள் ஏதேனும் தினேஷ்குமார் மீது உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினேஷ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்த இளம் பெண்கள் அனைவரும் வசதியானவர்கள் என்பதால் இவன் மீது புகார் அளிக்க அச்சப்பட்டு இருந்துள்ளனர். அதை தினேஷ்குமார் தனதுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது பாலியல் தொந்தரவுகளை தடையின்றி செய்து வந்து இருப்பது விசாரணையில் உறுதியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: