நீர்மட்டம் உச்சத்தை நெருங்கியது இடுக்கி அணைக்கு நீல எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில்  கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கண்ணூர்,  திருச்சூர், மலப்புரம் உள்பட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இதனால் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக முல்லை  பெரியாறு, இடுக்கி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இந்நிலையில்,  இடுக்கி அணையின் நீர்மட்டம் அதன் உச்சபட்ச உயரத்தை நெருங்கி வருகிறது.  அணையின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 2403 அடியாகும். இன்று காலை 9.10  மணியளவில் நீர்மட்டம் 2390. 88 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 2300  அடியை தாண்டினால் முதல்கட்டமாக நீல எச்சரிக்கை விடுவது வழக்கம். இதன்படி, நேற்று நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3 அடி மேலும் உயர்ந்தால்  ஆரஞ்சு எச்சரிக்கையும், 4 அடி உயர்ந்தால் சிவப்பு எச்சரிக்கையும்  விடுக்கப்படும்.

Related Stories:

More
>