அண்ணா மேலாண்மை நிலையம் இனி அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைப் பயிற்சி நிறுவனமாக சென்னையிலுள்ள அண்ணா மேலாண்மை நிலையம் இயங்கி வருகிறது. இது மேலாண்மை நிலையம் என்று அழைக்கப்படுவதால் இந்நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து தெளிவின்மை ஏற்பட்டது.

இது அரசு நிர்வாகப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனம்தான் என்பதைக் கருத்தில் கொண்டு இதன் பெயரை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி என்று அழைக்கப்படும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இனி அண்ணா மேலாண்மை நிலையம் என்பதற்குப் பதிலாக ‘அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி’ என்று அழைக்கப்படும் என தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>