மெக்சிகோவில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என தேடுதல் ஆணையம் அறிவிப்பு

மெக்சிகோ நாட்டில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மெக்சிகோ நாடு, போதைப்பொருள் பயன்பாடு, போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களை பொது வெளியில் சுட்டுக்கொன்றுவிட்டு தப்புதல் உள்ளிட்ட குற்ற செயல்களின் முக்கிய மையமாக இருந்து வருகிறது. இங்கு போதைப்பொருள் கடத்தலுக்காக சட்ட விரோதமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் மெக்சிகோவில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்று அந்நாட்டின் தேசிய தேடுதல் ஆணையம் அறிவித்துள்ளது. காணாமல் போன தங்கள் குடும்பத்தினரை ஆற்றங்கரையின் ஓரத்திலும், காடுகளிலும் தேடும் பணியில் பலர் வேதனையுடன் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த 2014-ம் ஆண்டு செப். மாதத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற 43 பள்ளி மாணவர்கள் என்ன ஆனார்கள் என இதுவரை தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: