தெக்ஷண மாற நாடார் சங்க தலைவர் ஆ. ராமராஜா மரணம்: 17ம் தேதி உடல் அடக்கம்

மும்பை: தெக்ஷண மாற நாடார் சங்கம் திருநெல்வேலி மும்பை கிளை சேர்மன் ஆ.ராமராஜா நேற்று காலை மரணம் அடைந்தார்.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஆனைக்குளம் புதூரை சேர்ந்தவர்  தெக்ஷண மாற நாடார் சங்கம் திருநெல்வேலி மும்பை கிளை சேர்மன் ஆ. ராமராஜா. இவர் மாரடைப்பால் நேற்று காலை 10:30 மணியளவில் மரணம் அடைந்தார்.

அவரது உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் காமராஜர் நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரி டாக்டர் பா . சிவந்தி ஆதித்தனார் கல்வி வளாகத்தில் வைக்கப்படும். தொடர்ந்து, மாலை 2 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தாராவி மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று தெக்ஷண மாற நாடார் சங்கம் திருநெல்வேலி மும்பை கிளையின் செயலாளர் எம்.எஸ்.காசிலிங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>