×

மீண்டும் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரான இந்தியா: நியூயார்க்கில் நடைபெற்ற வாக்குப்பதிவில் தேர்வானதாக அறிவிப்பு

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடாக பெரும்பான்மை ஆதரவுடன் 6-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். மனித உரிமைகள் ஆணையத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த தேர்தலில் 6வது முறையாக மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்திய தூதர் திரு மூர்த்தி, ஜனநாயக மற்றும் பன்முக தன்மை கொண்ட நாடான இந்தியா அடிப்படை மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் என தெரிவித்துள்ளார். தற்போதைய தேர்தல் மூலமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு அதாவது 2024-ம் ஆண்டு வரை மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இந்தியா உறுப்பு நாடாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Human Rights Commission ,India ,New York , India again a member of the Human Rights Commission: Announcement of selection in a poll held in New York
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை...