சொத்துக்களை தாமாக முன்வந்து பதிவு செய்தால் 5% வரி தள்ளுபடி: பிம்ப்ரி சிஞ்ச்வாட் மாநகராட்சி அறிவிப்பு

பிம்ப்ரி சிஞ்ச்வாட்: பிம்பிரி சிஞ்ச்வாட் மாநகராட்சி துணை கமிஷனர் ஸ்மிதா ஜகடே கூறியதாவது:நடப்பு ஆண்டு மாநகராட்சி நடத்திய சர்வேயின் போது பல பெரிய நிறுவனங்களுக்கு சொந்தமான பெருமளவு சொத்துக்கள் மாநகராட்சியில் மதிப்பீடு செய்து பதிவு செய்யப்படவில்லை என்றும் இதனால் அவற்றுக்கு சொத்து வரி விதிக்கப்படவில்லை என்றும் தெரிய வந்தது. மாநகராட்சிக்கு இந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி பெருமளவில் நிலுவையில் உள்ளது. இந்த சர்வேயின் போது வேறு பல நிறுவனங்களின் சிறிய அளவிலான சொத்துக்களும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவற்றுக்கும் வரி விதிக்கப்படவில்லை என்றும் தெரிய வந்தது. எனவே மாநகராட்சியில் பதிவு செய்யாத, மதிப்பீடு செய்யப்படாத சொத்துக்களை சர்வே செய்ய தனியார் நிறுவனத்தை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மதிப்பீடு செய்யப்படாத சொத்துக்களை பதிவு செய்வதற்கு வசதியாக மாநகராட்சி பிரத்தியேக இணைய தளம் ஒன்றை தொடங்கியுள்ளது. இதில் தாங்களாக முன்வந்து சொத்துக்களை பதிவு செய்தால், அவர்களுக்கு பொது வரியில் இருந்து 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். நடப்பு ஆண்டுக்கு மட்டுமே இந்த வரிச்சலுகை அளிக்கப்படும். இவ்வாறு துணை கமிஷனர் கூறினார்.

Related Stories:

More
>