தைவானில் 13 மாடி கட்டிடத்தில் 46 பேர் கருகி பலி

தாய்பே: தைவானில் 13 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 46 பேர் கருகி பலியாகினர்.தைவானில் உள்ள கவுஷியாங் நகரில் உள்ள 13 மாடி கட்டிடம், அடுக்குமாடி குடியிருப்பாகவும், வணிக வளாகமாகவும் இயங்கி வந்தது. இங்கு நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 4 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். இதில் 46 பேர் கருகி இறந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 79 பேரில் 14 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories:

More
>