×

நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தளங்களை திறக்க அனுமதி: இரவு 11 மணி வரை கடைகள் இயங்க அனுமதி.! தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்களை திறக்க அனுமதிக்குமாறு கோரிக்கைகள் எழுந்த நிலையில், இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

* நவம்பர் 1ம் தேதி முதல் திருமண விழாக்களில் 100 பேர் பங்கேற்கலாம் என அறிவிப்பு.

* தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள், மழலையர் பள்ளிகள், அங்கன்வாடிகள் செயல்பட அனுமதி.

* இன்று முதல் அனைத்து விதமான கடைகளும் இரவு 11 மணி வரை திறக்க அனுமதி.

* தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி.

* வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.

* கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடற்கரைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் செல்ல அனுமதி.

* அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் நடத்த தடை தொடரும்.

Tags : Government of Tamil Nadu , Permission to open places of worship on all days from November 1: Permission to operate shops until 11 pm! Government of Tamil Nadu order
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...