×

சென்னையில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்புகளில் குறைபாடுகளை 45 நாட்களில் சரிசெய்ய கட்டுமான நிறுவனத்திற்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னையில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்புகளில் குறைபாடுகளை 45 நாட்களில் சரிசெய்ய கட்டுமான நிறுவனத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கழிப்பறைகளில் பழைய பீங்கன் கோப்பைகளை எடுத்துவிட்டு புதிதாக பொருத்தவும் பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் கட்டப்பட்ட தரமற்ற குடிசைமாற்றுவாரிய குடியிருப்பய் சீரமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புளியந்தோப்பு கொடியிருப்புகளில் ஏற்பட்ட குறைபாடுகளை 45 நாட்களில் சரிசெய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட குடியிருப்புகள் தரமற்றவை என புகார் எழுந்த நிலையில் அதுகுறித்து ஐஐடி நிபுணர்கள் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் அதில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும் அதில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் அதில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்த இலையில் 45 நாட்களுக்குள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பில் தமிழ்நாடு வாழ்வுரிமை மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட பன்னடுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் தரமற்ற முறையில் அதன் கட்டுமானம் அமைந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து இது தொடர்பாக பல்வேறு தரப்பட்ட பிரச்சனைகள் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு மேம்பாட்டு வாரியமும் இணைந்து  ஐஐடி நிபுணர் குழுவிடம் இந்த கட்டிடத்தை ஆராய்ந்து அறிக்கை தர கேட்கப்பட்டிருந்தது.

 ஐஐடி நிபுணர்கள் முழுமையாக ஆய்வு செய்த பிறகு கடந்த அக்டோபர் 4-ம் தேதி அறிக்கையை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் கட்டுமான நிறுவனத்தின் மேல் முதற்கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவளைகள் வெளியாகியிருந்தன.அதன் தொடர்ச்சியாக தற்போது கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு வளாகத்தின் தரமற்று இருக்க கூடிய அந்த கட்டிடத்தின் பூச்சு வேலைகளை  முழுமையாக 45 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த பணிகளை தொடர்ச்சியாக தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்து, 45 நாட்களுக்கு பிறகு அதனுடைய சிறத்தன்மையை உறுதி செய்த பிறகு தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்தபின்னர் இந்த ஐஐடி நிபுணர் குழு அளித்த சுற்றைக்கையின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தகவல் வெளியாகும் என நம்பப்படுகிறது.


Tags : Government of Tamil Nadu ,KP Park ,Chennai , Chennai, KP Park, Construction Company, Government of Tamil Nadu
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...