×

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் மேலும் 18,987 பேர் பாதிப்பு, 246 பேர் உயிரிழப்பு, 19,808 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.51 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.40 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 18,987 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,40,20,730 ஆக உயர்ந்தது.

* புதிதாக 246 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,51,435 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 19,808 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,33,62,709 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,07,653  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை 96,82,20,997  பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 35,66,347 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : Corona ,India , India, corona, vulnerability, casualties
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...