×

ஆயுதபூஜை விடுமுறை: அரசு பஸ்களில் சொந்த ஊருக்கு ஆயிரக்கணக்கானோர் பயணம்: கோயம்ேபட்டில் கூட்டம் அலைமோதியது

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜய தசமி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக  பெரும்பாலானோருக்கு வரும் 17ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் வசிக்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று முன்தினம் முதல் புறப்பட்டு சென்றனர். நேற்று முன்தினம் கூட்டம் சற்று குறைவாக இருந்தது.  இந்நிலையில் நேற்று காலை முதலே ஏராளமானோர் பயணித்தனர். மாலை 6 மணிக்கு பிறகு நள்ளிரவு வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. இவர்களின் வசதிக்காக போக்குவரத்துத்துறையின் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் எவ்வித சிரமமும் இல்லாமல் மக்கள் பயணித்தனர்.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நடப்பாண்டில் ஆயுதபூஜை ெதாடர் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. நேற்று (நேற்று முன்தினம்) முன்பதிவு செய்து சுமார் 3,000 பேர் மட்டுமே பயணித்தனர். இன்று (நேற்று) முன்பதிவு செய்து 15,000 பேர் பயணித்தனர். மேலும் முன்பதிவு செய்யாமல் ஏராளமான மக்கள் பயணித்தனர். அவர்களின் வசதிக்காக போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் எவ்விதமான சிரமமும் இல்லாமல் மக்கள் பயணித்தனர். இதேபோல் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் 16ம் தேதி முதல் மீண்டும் திரும்புவார்கள். இவர்களின் வசதிக்காக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Pooja ,Coimbatore , Aayudha pooja, holiday
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை