16ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: ஆயுதபூஜை, விஜய தசமி நாட்களை முன்னிட்டு 14, 15ம் தேதி் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி பணி நாளான 16ம் தேதியும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் பள்ளிக் கல்வித்துறைக்கு பல கோரிக்கைகள் வந்தன. இந்நிலையில், 16ம் தேதி விடுமுறை அளித்து பள்ளிக்  கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடம்  இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவர்கள் விடுமுறை ஏதும் இல்லாமல் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். கணிசமான ஆசிரியர்கள் தங்களின் சொந்த மாவட்டங்களில் இருந்து தொலை தூரத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் 14 மற்றும் 15ம் தேதிகள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், வார இறுதி நாளான சனிக்கிழமை (16ம் தேதி) அன்று விடுமுறை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி 16ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

Related Stories:

More
>