உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 77 பேர் வெற்றி

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டனர். இதில் 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 77 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பிரபு என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Related Stories:

More
>