×

வருவாய் நிர்வாக ஆணையரகம் துணை ஆட்சியருக்கான வலைதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: வருவாய் நிர்வாக ஆணையரக இணையதளம், துணை ஆட்சியர்களுக்கான வலைதளம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல் வலைதளம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கான www.cra.tn.gov.in என்ற வருவாய் நிர்வாக ஆணையரக இணையதளம், https://www.cra.tn.gov.in/tnscs என்ற துணை ஆட்சியர்களுக்கான வலைதளம் மற்றும் https://www.cra.tn.gov.in/vaotransfer என்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல் வலைதளம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

இந்த இணையதளத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மை துறை சம்பந்தப்பட்ட அரசு திட்டங்களின் விவரங்கள் மற்றும் அரசாணைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் பயன்கள் குறித்து  அறிந்து கொள்ளலாம்.  துணை ஆட்சியர்களுக்கான பிரத்தியேக வலைதளத்தில், அரசு விதிகள் மற்றும் சட்டங்கள், அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் அரசாணைகள், வழிகாட்டு நெறிமுறைகள், சுற்றறிக்கைகள், பணிமாறுதல் மற்றும் பணி நியமனங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள இயலும்.  கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல் வலைதளம் மூலம் பணி மாறுதல்களை தாமதமின்றியும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த இயலும்.

Tags : Deputy Commissioners of ,Administration ,Chief Minister ,MK Stalin , Chief MK Stalin
× RELATED நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார்...