×

வெளிநாட்டுக்கு கடத்த இருந்த 4 தஞ்சாவூர் ஓவியங்கள் 10 சிலைகள் அதிரடி மீட்பு

சென்னை: மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில்  ஒரு வணிக வளாக கட்டிடத்தின் கீழ்தளத்தில் சாமி சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தி இருப்பதாக   கிண்டி சிலை கடத்தல் பிரிவு போலீசாருக்குவந்த ரகசிய தகவல் கிடைத்தது.  இதனையடுத்து, சிலை கடத்தல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் அசோக் நடராஜன் தலைமையில் துணை கண்காணிப்பாளர்கள் முத்துராஜா, மோகன் மற்றும் ஆய்வாளர்கள் ரவீந்திரன், காஞ்சனா, அம்மு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அங்கு சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கிவைத்திருந்த ராமர், லட்சுமணர், சீதை, அனுமன், கிருஷ்ணன் போன்ற 5 உலக சிலைகள் மற்றும் நாரதர் துவாரபாலகர், நந்தி, கிருஷ்ணர் நடமாடும் பெண் போன்ற 5 மர சிலைகள் மற்றும் பாலகிருஷ்ணன் பெருமாள், பட்டாபிஷேக ராமர், கிருஷ்ணர், போன்ற 4 சாமிகளின் தஞ்சாவூர் ஓவியம் போன்றவற்றை தனிப்படை  போலீசார் கைப்பற்றினர். சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றவர்கள் யார் அந்த சிலைகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Tanjavur ,Action Rescue , Thanjavur, Statues, Recovery
× RELATED தஞ்சாவூரில் இளநீர் விற்பனை மும்முரம்: அலைமோதும் மக்கள் கூட்டம்