பள்ளிப்பட்டு அதிமுக ஒன்றியக்குழு தலைவர் பல லட்சம் ரூபாய் முறைகேடு: திருத்தணி எம்எல்ஏ தலைமையில் புகார்

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜான்சிராணி என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் பதவியேற்ற நாள் முதல் ஒன்றிய பொதுநிதியில் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாகவும், கொரோனா காலத்தில் பிளீச்சிங் பவுடர் வாங்குவதிலிருந்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு பல லட்ச ரூபாய் கையாடல் செய்துள்ளார். நடவடிக்கை எடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அதிமுக ஒன்றியக் குழு தலைவர் ஜான்சிராணி மீது 12 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட 9 பேர் திருத்தணி வருவாய் கோட்ட அலுவலரிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவின் மீது வருவாய கோட்ட அலுவலர் விரைந்து நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரனிடம் மீண்டும் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்பட 9  பேரும் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் தலைமையில் அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்பட 9 ஒன்றியக் குழு உறுப்பினர்களும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விரைவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமாரிடமும் புகார் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்ததார். பள்ளிப்பட்டு: திருத்தணி கோட்டாட்சியர் சத்யாவை சந்தித்து ஒன்றிய குழு தலைவர் தனிச்சையாக செயல்படுவதாக ஒன்றியக்குழு தலைவர் மீது புகார் செய்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தினர். வரும் 28ம் தேதி கவுன்சிலர்கள் கூட்டத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று ஒன்றிய குழு தலைவருக்கு  கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: