நீதிமன்ற அனுமதியில் காவலில் எடுத்து ரமேஷ் எம்பியிடம் சிபிசிஐடி விசாரணை

கடலூர்: கடலூர் எம்பி ரமேஷுக்கு சொந்தமான பணிக்கன்குப்பம் முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்த்த கோவிந்தராசு (55) அடித்து கொல்லப்பட்ட வழக்கில், சிபிசிஐடி போலீசார், எம்பியின் உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லாபிச்சை, சுந்தர்ராஜ், வினோத் ஆகியோரை சிகைது செய்தனர். கடந்த 11ம் தேதி பண்ருட்டி  கோர்ட்டில் ரமேஷ் எம்பி சரணடைந்தார். அவரை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடலூர் நீதிமன்றத்தில் நேற்று ரமேஷ் எம்பியை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி மனு தாக்கல் செய்தனர். ஆனால், ஒரு நாள் மட்டும் விசாரிக்க அனுமதி வழக்கி நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் ரமேஷ் எம்பியை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

4 மணி நேர விசாரணை முடிந்து மீண்டும் கடலூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் ரமேஷ் எம்பியை அடைத்தனர்.

Related Stories:

More
>