தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் வெற்றி பெற்ற 11 பேர் ராஜினாமா

சென்னை: தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில் விஷ்ணு மன்ச்சு தலைமையிலான அணியினர் பெரும்பான்மையான இடத்தை பிடித்தனர். விஷ்ணு மன்ச்சு தலைவர் ஆனார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்தார். அவர் அணியை சேர்ந்த 11 பேர் செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது ராஜினாமா செய்துள்ளனர். விஷ்ணு மன்ச்சு தலைமையிலான நிர்வாகிகளின் பணிக்கு நாங்கள் இடையூறாக இருக்க விரும்பவில்லை. அதனால் ராஜினாமா செய்வதாக கூறியுள்ளனர். ஏற்கனவே சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து பிரகாஷ்ராஜ் விலகியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: