சாட்சி விசாரணைக்கு ஆஜராகாத திருவையாறு டிஎஸ்பிக்கு பிடிவாரன்ட்: கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவு

கும்பகோணம்: சாட்சி விசாரணைக்கு ஆஜராகாத திருவையாறு டிஎஸ்பிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2013ல் நடந்த சாலை விபத்தில் கும்பகோணத்தை சேர்ந்த கண்ணையன் மகன் கர்ணன் உயிரிழந்தார். இதும் தொடர்பாக திருவையாறு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு, கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 2013ல் இருந்து நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சியளிக்க திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தரணிதரன், சாட்சியளிக்க ஆஜராகாத டிஎஸ்பி ராஜ்மோகனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Related Stories: