×

திருப்போரூர் ஒன்றியத்தில் 47 புதுமுகங்கள்

திருப்போரூர்:  திருப்போரூர் ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், 47 பேர், ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், அனைவரும் புதுமுகங்கள். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், திருப்போரூர் ஒன்றியம் கரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்ட இரா.ஏழுமலை 664 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திருமலை 662 வாக்குகள் பெற்றார். 2 வாக்கு வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், திருப்போரூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வார்டு எண் 8ல் திமுக வேட்பாளராக போட்டியிட்ட சுகுணா 1894 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரிடம் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் அமுதா 1892 வாக்குகள் பெற்றார். அவரது தோல்விக்கு 2 வாக்குகள் மட்டுமே வித்தியாசம். மேலும், திருப்போரூர் ஒன்றியத்தில் 50 ஊராட்சி மன்ற தலைவர்களில் பனங்காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக தனசேகரன் போட்டியின்றி வெற்றி பெற்றார். மீதம் இருந்த 49 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. அதில் நாவலூர் மற்றும் தையூர் ஊராட்சிகளை தவிர மற்ற 47 ஊராட்சிகளில் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் புதுமுகங்கள்.

Tags : Thiruporur Union , 47 newcomers in Thiruporur Union
× RELATED திருப்போரூர் ஒன்றியத்தில் 24 ஊராட்சி...