டி20 உலக கோப்பை இந்திய அணியில் அக்சருக்கு பதிலாக ஷர்துல் தாகூர்

புதுடெல்லி: ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில், சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் அக்சர் படேலுக்கு பதிலாக வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை டி20 தொடர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஒமானில் அக். 17ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 15 பேர் அடங்கிய பிரதான அணியில் இருந்து அக்சர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஷர்துல், இதுவரை 18 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அக்சர் படேல் மாற்று வீரர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல், லக்மன் மெரிவாலா, வெங்கடேஷ் அய்யர், கர்ண் ஷர்மா, ஷாபாஸ் அகமது, கே.கவுதம் ஆகியோர் இந்திய அணி வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் உதவ உள்ளனர்.

Related Stories: