இந்திய அணியின் புதிய சீருடை அறிமுகம்

ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடரில் களமிறங்க உள்ள இந்திய அணி வீரர்களுக்கான புதிய சீருடை நேற்று அறிமுகமானது. ‘பில்லியன் சியர்ஸ் ஜெர்சி’ என அழைக்கப்படும் இந்த சீருடை இந்திய ரசிகர்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஜெர்சி குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘இந்திய அணிக்கு உள்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவர்களின் உற்சாகத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்த இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது’ என்றார். இந்த சீருடை வர்த்தக ரீதியாகவும் கடைகளில் ரூ.1,799க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

Related Stories:

More
>