நவம்பர் 19 முதல் துவக்கம் மதுரை - திருப்பதி நேரடி விமான சேவை

அவனியாபுரம்: மதுரை - திருப்பதி நேரடி விமான சேவை  நவ. 19ம் தேதி துவங்க உள்ளது.நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதித்து, தற்போது கொரோனா பாதிப்பு சரிந்து வரும் நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு நவம்பர் 19ம் தேதி முதல் நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் துவங்க இருக்கிறது. இதன்படி தினசரி  மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு திருப்பதி சென்றடையும். மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.40க்கு மதுரை விமான நிலையம் வந்தடையும். இத்தகவலை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories:

More
>